கவின் படத்திலிருந்து விலகிய அனிருத்.. RockStar-ஆல் கடைசியில் ஏமாந்தது தான் மிச்சம்..!

By Soundarya on டிசம்பர் 26, 2024

Spread the love

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் தான். அந்த சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார். இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

   

அதன் பிறகு கவின் சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கினார். முதல் முதலில் நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர் நடித்த அடுத்த படம் லிப்ட் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. பின்னர் டாடா படத்தில் நடித்தார். தற்போது நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில், சிவபாலன் இயக்கத்தில் பிளடி பக்கர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்குநேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

   

 

இந்த படத்தில் கவின் பிச்சைக்காரன் ரோலில் நடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து, கவின் நடித்து வரும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.லலித்குமார் தயாரிக்க இருக்கும்  இந்த படத்திற்கு ஹாய் என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இதையடுத்து கிஸ், மாஸ்க் ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் ‘கிஸ்’ படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டாராம். இதற்கு காரணம் அவர் கிட்டத்தட்ட 11 படங்களுக்கு இசையமைப்பதால் இந்த படத்திலிருந்து அவரே விலகிவிட்டாராம் என்றார் சொல்லப்படுகிறது. இதுஒருபுறமிருக்க மறுபுறம் சம்பளம் குறைவு காரணமாக வெளியேறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.