சென்னை மற்றும் திருப்பூரைத் தொடர்ந்து தற்போது திண்டுக்கல் மாவட்டத்திலும் டெங்கு உயிரிழப்பு பதிவாகியுள்ள செய்தி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த சிறுமி அக்ஷிதா ஸ்ரீ, காய்ச்சல் காரணமாக முதலில் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் காய்ச்சல் குறையாததால், மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்த பிஞ்சுயிர் பிரிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாகப் பதிவாகிவரும் டெங்கு மரணங்கள், மாவட்ட சுகாதாரத் துறையின் தற்போதைய தடுப்பு நடவடிக்கைகளில் உள்ள குளறுபடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவல் தீவிரமடைந்து வரும் இத்தகைய சூழலில், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் பாதிப்போடு வருபவர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே துரித இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்வதுடன், முறையான சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும். மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக்கொண்டு தேவையற்ற நீர் தேங்குவதைத் தவிர்ப்பதோடு, அரசுத் தரப்பிலும் போர்க்கால அடிப்படையில் காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்களைத் தீவிரப்படுத்தினால் மட்டுமே இது போன்ற இழப்புகளைத் தடுத்து நிறுத்த முடியும்.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…