விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம், தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை வாரியம் (CBFC) இதுவரை சான்றிதழ் வழங்காததால் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இந்த அதிகாரப்பூர்வ முடிவை எடுத்துள்ளது.
தணிக்கைச் சான்றிதழ் தாமதம் குறித்து படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்து படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், ரசிகர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியுள்ளது.
