நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் கொடி பாடலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் பிரபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் – விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் இன்று ) பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. மாநாடு தொடங்கியதும் அரங்கில் விஜய் திரைப்படங்களில் இடம்பெற்ற அரசியல் பேசும் பாடல்கள் இசைக்கப்பட்டன. பின்னர் தவெக கட்சியின் கொடிப் பாடல் இசைக்கப்பட்டது. மாநாட்டுப் பந்தலில் இருந்த மேடையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் சோபனா அமர்ந்திருக்க, கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது.
இதனை தொடர்ந்து மாலை 4.03க்கு மேடைக்கு வந்த கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு உற்சாகமாக வந்து தொண்டர்களைப்பார்த்து கையசைத்தார்.பின்னர் 800 மீட்டர் நீளமுள்ள ரேம்பில் நடந்துவந்தார். அப்போது தொண்டர் ஒருவர் அவர்மீது வீசிய கட்சி துண்டை தன் தோளில் முதன் முதலாக அணிந்து கொண்டார். இதனை தொடர்ந்து தொண்டர்கள் வீசிய துண்டுகளை தன் தோளில் அணிந்து கொண்டார். பின்னர் மேடையில் ஏறிய அவர் கண்கள் கலங்க கூட்டத்தைக் கண்டு கையசைத்தார். பின்னர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். மாலை 4.21 மணியளவில் கட்சியின் கொடியை விஜய் ஏற்றிவைத்தார்.
மேடையில் இருந்தவாறே பட்டனை அழுத்தி அவர் கொடியை ஏற்றி வைத்தார்.இதனைத் தொடர்ந்து கட்சியின் கொள்கை கோட்பாடுகளும் செயல்திட்டங்களும் வாசிக்கபட்டன. அதில் மக்களை கவரும் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது. அதில், 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருமொழிக் கொள்கை, நீட் தேர்வு, தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம், மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு தனி சட்டம், மது மற்றும் போதை இல்லா தமிழகம், சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை. மாவட்டம் தோறும் காமராஜர் மாதிரி அரசு பள்ளிகள் ஏற்படுத்தப்படும். அறிவியலுக்கு எதிரான சிந்தனைகள் நிராகரிக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…