16 ஆம் நூற்றாண்டில் வேட்டையாடுவதற்காக கட்டப்பட்டது… ஆக்ராவின் காஞ்ச் மஹால் வரலாறு…

Spread the love

டெல்லி ஆக்ரா என்றால் நாம் நினைவுக்கு வருவது தாஜ்மஹால் தான். ஆனால் இந்தியாவில் பல வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியமிக்க இடங்கள் இருக்கின்றன. தாஜ்மஹாலை போலவே ஆக்ராவில் மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க பழமையான இடம் என்றால் அது காஞ்ச் மஹால். இதைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இதன் வரலாறு என்ன இது எப்போது கட்டப்பட்டது யார் கட்டினார்கள் என்பதை பற்றி இனி காண்போம்.

முகலாய பேரரசர் ஜஹாங்கிரால் வேட்டையாடும் விடுதியாக 1609 ஆம் ஆண்டு இந்த காஞ்ச் மஹால் கட்டப்பட்டது. வேட்டையாடும்போது ஓய்வெடுக்கும் விடுதியாக மட்டுமல்ல அரசு குடும்பத்து பெண்கள் ஓய்வெடுக்கும் விடுதியாகவும் இந்த காஞ்ச் மஹால் இருந்திருக்கிறது. இதை சுற்றி தோட்டங்கள் நீர்நிலைகள் மற்றும் தரை பாதைகள் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்திருக்கிறது.

இந்த காஞ்ச் மஹால் மாளிகையின் சுவர்கள் ஒயின் குவளைகள் அரபஸ்க்கள் மலர்கொடிகள் மற்றும் பல வடிவமைப்புகளுடன் சிக்கலான செதுக்கப்பட்ட சிகப்பு கற்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. முகலாய கட்டிடக்கலையின் அம்சமாக இது இருக்கிறது. இந்த காஞ்ச் மஹாலில் நீம் பச்சை மற்றும் ஆரஞ்சு நிற மெருகூட்டப்பட்ட கோடுகளின் மொசைகுகளால் தரை அமைக்கப்பட்டிருப்பது. இது பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இது மட்டுமில்லாமல் மத்திய மண்டபம் மஹாலுக்குள் இரண்டு வாசல்கள் சூரிய ஒளி மற்றும் காற்று வருதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. நான்கு சதுர வடிவ அறைகள் விசாலமான பால்கனிகள் ஆகியவற்ற இந்த காஞ்ச் மஹால் கொண்டிருக்கிறது. மத்திய மண்டபத்தில் இருபுறமும் எக்கோணத் தூண்கள் மேல் மாடியில் உள்ள தூண்களுக்கு விகடங்களாக பார்ப்பதற்கு அழகாக இருந்திருக்கிறது.

இந்த காஞ்ச் மஹால் சர்சு மிஷனரி சொசைட்டியின் பராமரிப்பு கீழ் இருந்தது. தற்போது தொல்லியல் துறையால் கையகப்படுத்தப்பட்டு இந்த காஞ்ச் மஹால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் பார்வைக்கும் இது அனுமதிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை காஞ்சி மஹாலை நீங்கள் சென்று பார்வையிடலாம்.

admin

Recent Posts

“36% கமிஷன் புகாரும்.. அதிரப்போகும் கோட்டையும்”… திமுகவை பகிரங்கமாக தாக்கிய காங்கிரஸ் எம்பி… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின்…

23 seconds ago

CM விஜய் இபிஎஸ்-ஐ மட்டும் ஏன் பார்க்கல?… ஓப்பனாக பேசிய சி.டி.ஆர் நிர்மல் குமார்… அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தின் தொடக்கமாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வரும்…

6 minutes ago

“கைகட்டி நிற்கும் அதிகாரிகள்.. ஒரு FILE கூட மூவ் ஆகல”…. மொத்தமாக முடங்கிய சென்னையின் 3000 கோடி ப்ராஜக்ட்… விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பொறுப்பேற்று ஒரு வாரத்திற்கு மேலாகியும், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்னும் ஒதுக்கீடு…

11 minutes ago

“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது?”…. மௌனம் கலைத்த அமைச்சர் நிர்மல் குமார்… பட்ஜெட்டுக்கு பின் காத்திருக்கும் ட்விஸ்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்துள்ள நிலையில், முதல் ஒரு வாரத்திலேயே பல்வேறு…

29 minutes ago

“1993 நரசிம்ம ராவ்… 2026 விஜய்?”… தமிழக அரசியலில் அடுத்த ‘சிபிஐ’ அணுகுண்டு… இன்பதுரை போட்ட அந்த ஒரு ட்வீட்….!

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைமையிலான அரசு வெற்றி…

35 minutes ago

அதிமுகவிலிருந்து ‘அவுட்’… தவெக-வில் ‘இன்’… கோட்டையை ஆளப்போகும் அந்த 7 விக்கெட்டுகள் யார்?… ராஜ்பவனுக்கு போகும் அந்த ‘லிஸ்ட்’…!

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சட்டமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிலும் வெற்றி…

39 minutes ago