டெல்லி ஆக்ரா என்றால் நாம் நினைவுக்கு வருவது தாஜ்மஹால் தான். ஆனால் இந்தியாவில் பல வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியமிக்க இடங்கள் இருக்கின்றன. தாஜ்மஹாலை போலவே ஆக்ராவில் மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க பழமையான இடம் என்றால் அது காஞ்ச் மஹால். இதைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இதன் வரலாறு என்ன இது எப்போது கட்டப்பட்டது யார் கட்டினார்கள் என்பதை பற்றி இனி காண்போம்.

முகலாய பேரரசர் ஜஹாங்கிரால் வேட்டையாடும் விடுதியாக 1609 ஆம் ஆண்டு இந்த காஞ்ச் மஹால் கட்டப்பட்டது. வேட்டையாடும்போது ஓய்வெடுக்கும் விடுதியாக மட்டுமல்ல அரசு குடும்பத்து பெண்கள் ஓய்வெடுக்கும் விடுதியாகவும் இந்த காஞ்ச் மஹால் இருந்திருக்கிறது. இதை சுற்றி தோட்டங்கள் நீர்நிலைகள் மற்றும் தரை பாதைகள் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்திருக்கிறது.
இந்த காஞ்ச் மஹால் மாளிகையின் சுவர்கள் ஒயின் குவளைகள் அரபஸ்க்கள் மலர்கொடிகள் மற்றும் பல வடிவமைப்புகளுடன் சிக்கலான செதுக்கப்பட்ட சிகப்பு கற்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. முகலாய கட்டிடக்கலையின் அம்சமாக இது இருக்கிறது. இந்த காஞ்ச் மஹாலில் நீலம் பச்சை மற்றும் ஆரஞ்சு நிற மெருகூட்டப்பட்ட கோடுகளின் மொசைகுகளால் தரை அமைக்கப்பட்டிருப்பது. இது பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இது மட்டுமில்லாமல் மத்திய மண்டபம் மஹாலுக்குள் இரண்டு வாசல்கள் சூரிய ஒளி மற்றும் காற்று வருவதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. நான்கு சதுர வடிவ அறைகள் விசாலமான பால்கனிகள் ஆகியவற்ற இந்த காஞ்ச் மஹால் கொண்டிருக்கிறது. மத்திய மண்டபத்தில் இருபுறமும் எக்கோணத் தூண்கள் மேல் மாடியில் உள்ள தூண்களுக்கு விகடங்களாக பார்ப்பதற்கு அழகாக இருந்திருக்கிறது.
இந்த காஞ்ச் மஹால் சர்சு மிஷனரி சொசைட்டியின் பராமரிப்பு கீழ் இருந்தது. தற்போது தொல்லியல் துறையால் கையகப்படுத்தப்பட்டு இந்த காஞ்ச் மஹால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் பார்வைக்கும் இது அனுமதிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை காஞ்சி மஹாலை நீங்கள் சென்று பார்வையிடலாம்.
