“11 பேருக்கு போட்ட ஸ்கெட்ச்… 500 பேருக்கு விரிந்த வலை”…. கூண்டோடு காலியாகும் அதிமுக…. EPS-க்கு திடீர் தலைவலி….!

By Nanthini on ஆடி 20, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களான 11 முக்கிய நிர்வாகிகளை அதிமுக தலைமை கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது.

இந்த அதிரடி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்த மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர அளவிலான நிர்வாகிகள் பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பவும் அவர்கள் தீவிரமாக திட்டமிட்டு வருவது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.