2029-ல் ‘PM விஜய்’?…. அதிமுக உதயகுமார் கொளுத்திப் போட்ட புது வெடி…. மத்திய உளவுத்துறைக்குச் சென்ற பரபரப்பு ரிப்போர்ட்….!

By Nanthini on ஆடி 20, 2026

Spread the love

2029 நாடாளுமன்றத் தேர்தலில் முதல்வர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராகக் களம் இறக்கத் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருவதாக அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் இன்ப்ளூயன்சர்கள் மூலமாக விஜய் செய்யாத காரியங்களைக் கூடச் செய்தது போலப் போலியான வீடியோக்களும் ‘ரீல்ஸ்களும்’ பரப்பப்பட்டு வருகின்றன என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசும் உளவுத்துறையும் உரிய விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தவெக மற்றும் விஜய் தரப்பிற்கு எதிராக தினமும் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு, இந்த விவகாரத்தை அரசியல் களத்தில் அவர் தீவிரமாக எழுப்பி வருவது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.