“அப்பாவால் நேர்ந்த பாலியல் கொடுமை…” ஆக்சிஜன் தட்டுப்பாடால் தாயை இழந்த சோகம்…! 500-க்கும் மேற்பட்ட உயிர்களை காத்த ஆட்டோ சேவை…. கொரோனா காலத்து நிஜ தேவதை பற்றி உங்களுக்கு தெரியுமா…?

By Devi Ramu on ஆடி 20, 2026

Spread the love

சென்னையைச் சேர்ந்த சீதாதேவி கடந்த 24 ஆண்டுகளாக ஆதரவற்றோர், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் போன்ற விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்திற்காகத் தொடர்ந்து பல நற்பணிகளை ஆற்றிவருகிறார். கடந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், ஆக்சிஜன் தட்டுப்பாடால் தனது தாயாரை இழந்த கோரச் சம்பவம் இவரைப் பெரிதும் உலுக்கியது. இத்தகைய துயரம் இனி வேறு எவருக்கும் நிகழக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில், தங்களின் சொந்த ஆட்டோக்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பொருத்தி 500-க்கும் மேற்பட்ட ஏழை மக்களின் உயிர்களைக் காப்பாற்றிப் பெரும் சாதனை படைத்துள்ளார்.

அபயமில்லாமல் கைவிடப்பட்டு ஏமாற்றத்தையும் வறுமையையும் மட்டுமே எதிர்கொண்ட பலருக்குத் தஞ்சம் அளித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் உன்னதக் காப்பகத்தை இவர் நடத்தி வருகிறார். தந்தையால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஒரு பெண், தனது குழந்தையுடன் இந்த இல்லத்தில் அடைக்கலம் புகுந்து தற்பொழுது தற்சார்புடன் புதிய திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார். தமக்கு என்று தனிக் குடும்பம் ஏதுமில்லாமல் ஆதரவற்ற அனைவரையும் தன் சொந்தங்களாகக் கருதிச் சேவை புரிந்து வரும் இவரின் மனிதநேயப் பணிகள் பலருக்கும் உத்வேகம் அளிக்கின்றன.