தமிழகப் பட்ஜெட்டில் மகளிருக்கான உரிமைத் தொகையை மாதம் ₹2,500-ஆக உயர்த்தி வழங்கத் தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடைமுறையிலிருக்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் மாதம் ₹1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இதற்காக ஆண்டுதோறும் சுமார் ₹13,800 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இத்தொகையைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500-ஆக உயர்த்த வேண்டுமெனில், ஆண்டு நிதி ஒதுக்கீட்டைத் தோராயமாக ₹30,000 கோடியாக அதிகரிக்க வேண்டி இருக்கும்.
இதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களைக் கண்டறிந்து, உரிய வழிமுறைகளைத் தயார் செய்யுமாறு அரசு உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இத்திட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில், மாநிலத்தின் லட்சக்கணக்கானக் குடும்பங்களில் உள்ள பெண்களின் பொருளாதாரச் சுதந்திரமும் சமூக மேம்பாடும் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
