130 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் கமல் வீட்டிலேயே சொத்து பிரச்னையா..? அப்பாவுக்கு மகள்கள் போட்ட கண்டிசன்.. அப்செட்டில் கமல்..

By Sumathi on ஜனவரி 26, 2024

Spread the love

நடிகர் கமல்ஹாசன் சினிமா மீது தீராத காதல் கொண்டவர். அவர் சினிமாவுக்குள் வந்தது நடனக்கலைஞராக தன்னை வெளிப்படுத்தி தன் திறமையை நிரூபிக்க விரும்பினார். ஆனால் தங்கப்பன் மாஸ்டரிடம் நடனம் கற்ற அவர், ஜெயலலிதா போன்றவர்களுக்கு நடனம் கற்றுத் தந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கே பாலசந்தர் அவரை சினிமா நடிகராக மாற்ற, அதிலும் அவரது அபார ஆற்றல் வெளிபட நடிப்பு திறனுடன் பல படங்களில் தனது நடனத்திறமையையும் வெளிப்படுத்தி சந்தோஷப்பட்டார் கமல்ஹாசன்.

   

சினிமாவில் வாழ்வதால் அந்த சினிமாவில் புதிய புதிய தொழில்நுட்பங்களை, புதிய மாற்றங்களை கொண்டுவருவதில் கமலுக்கு அதிக ஆர்வம் உண்டு. அதே போல் மற்ற இயக்குநர்கள், நடிகர்களின் திறமையை வெளிப்படுத்தவும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற சொந்த படத் தயாரிப்பு நிறுவனத்தை தனது அண்ணன் சந்திரஹாசனுடன் சேர்ந்து துவக்கினார்.

   

அதில் தனது பல படங்களை தயாரித்தார். அதே போல் பிற நடிகர்கள் நடித்த, இயக்குநர்கள் இயக்கிய படங்களையும் தயாரித்தார். இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதே போல் நடிகர் சிலம்பரசனும், தேசிங்கு பெரியசாமி இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.

 

இப்போது இந்தியன் 2, இந்தியன் 3, தக்லைப், கல்கி என படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி நடித்து வரும் கமல், ஒவ்வொரு படத்தில் நடிக்கவும் ரூ. 150 கோடி சம்பளம் வாங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அவருக்கு ரூ. 150 கோடி சம்பளம் தரப்படுகிறது. இப்படி நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்கி சம்பாதிக்கும் கமல், அதை மீண்டும் மீண்டும் சினிமாவில் முதலீடு செய்து அதிகளவில் நஷ்டமடைகிறார். நிறைய படங்களை, கடன் வாங்கி தயாரித்தும் பணத்தை இழக்கிறார்.

அதனால் இனிமேல் படங்கள் தயாரிப்புக்காக கமல் கடன்கள் எதுவும் வாங்கவே கூடாது, அரசியலில் அதிக செலவு செய்யக்கூடாது என அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் இருவரும் தங்களது மூத்த அக்காக்கள் அனுஹாசன், சுஹாசினி ஆகியோரை கமலிடம் அழைத்துச் சென்று பஞ்சாயத்து பேசியுள்ளனர். இதே கருத்தை அனுஹாசன், சுஹாசினி வலியுறுத்திய நிலையில், அதற்கு கமல்ஹாசனும் வேறு வழியின்றி, ஒத்துக்கொண்டு இனி சம்பாதிக்கும் பணத்தை மகள்களுக்காக சேமிப்பதாக உறுதிமொழி தந்திருக்கிறார்.