விகாசாபாத் மாவட்டம் பந்த்வாரம் மண்டலம் யச்சாரம் கிராமத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலனைத் திருமணம் செய்ய பெற்றோர் அனுமதிக்காத ஆத்திரத்தில், கடந்த ஜனவரி மாதம் அவர்களுக்கு நச்சு ஊசி செலுத்தி கொலை செய்த நக்க சுரேகா என்ற யுவதி தற்கொலை செய்துகொண்டார். காதலர்களின் காதலுக்குத் தடை விதித்தற்காக பெற்றோரைக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜனவரி மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேகா, கடந்த ஜூலை 31 அன்று ஜாமினில் வெளியே வந்து, சங்கரெட்டி சாந்தி நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி வேலை தேடி வந்தார். பெற்றோைக் கொன்ற குற்ற உணர்ச்சியாலும், தனிமை மற்றும் எதிர்கால பயத்தாலும் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனக்கு இனி வாழப் பிடிக்கவில்லை என்று தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு, கடந்த 23ஆம் தேதி நள்ளிரவில் தானும் அதே நச்சு ஊசியைச் செலுத்திக் கொண்டு சுரேகா தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் மாவட்டம் கோகாமேடி சுங்கச்சாவடியில் 21 வயதான காளு லால் என்ற வாலிபர் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் வாலட்டர்கஞ்ச் போலிஸ் எல்லைக்குட்பட்ட கணேஷ்பூர் பகுதியில், இளைஞர் ஒருவர் சாலையோரமாக அமைதியாக நின்று…
ஹரியானா மாநிலம் நூ பகுதியில் அமைந்துள்ள தில்லி தர்பார் உணவகம் எதிரே, அதிவேகமாக வந்த வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும்…
மும்பையின் ஆரே மெட்ரோ காம்ப்ளக்ஸ் வளாகத்திற்குள் உள்ள மின்சாரக் குழாயில் சிக்கியிருந்த சுமார் 3 அடி 7 அங்குலம் நீளமுள்ள…
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், SIR (சிறப்பு புலனாய்வு அறிக்கை) முறையிலான…
கடலூர் மாவட்டம் துறைமுகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடிப் பள்ளிக்குச் சென்ற 3 வயது பெண் குழந்தை, வீட்டின்…