அட கொடுமையே… காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த… பெற்றோரை கொன்ற மகள்… ஜாமினில் வெளியே வந்து எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஆவணி 25, 2026

Spread the love

விகாசாபாத் மாவட்டம் பந்த்வாரம் மண்டலம் யச்சாரம் கிராமத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலனைத் திருமணம் செய்ய பெற்றோர் அனுமதிக்காத ஆத்திரத்தில், கடந்த ஜனவரி மாதம் அவர்களுக்கு நச்சு ஊசி செலுத்தி கொலை செய்த நக்க சுரேகா என்ற யுவதி தற்கொலை செய்துகொண்டார். காதலர்களின் காதலுக்குத் தடை விதித்தற்காக பெற்றோரைக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜனவரி மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேகா, கடந்த ஜூலை 31 அன்று ஜாமினில் வெளியே வந்து, சங்கரெட்டி சாந்தி நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி வேலை தேடி வந்தார். பெற்றோைக் கொன்ற குற்ற உணர்ச்சியாலும், தனிமை மற்றும் எதிர்கால பயத்தாலும் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

   

இந்நிலையில், தனக்கு இனி வாழப் பிடிக்கவில்லை என்று தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு, கடந்த 23ஆம் தேதி நள்ளிரவில் தானும் அதே நச்சு ஊசியைச் செலுத்திக் கொண்டு சுரேகா தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.