இயக்குனர் பாக்கியராஜ் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். முன்னணி இயக்குனரான பாரதிராஜாவிடம் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் பாக்யராஜ் அசிஸ்டெண்டாக வேலை பார்த்துள்ளார். கடந்த 1979-ஆம் ஆண்டு ரிலீசான புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் பாக்யராஜ் ஹீரோவாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

அதன் பிறகு சுவர் இல்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், விடியும் வரை காத்திரு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் உள்ளிட்ட படங்களில் பாக்யராஜ் நடித்தார். அந்த காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பூர்ணிமா ஜெயராமை பாக்யராஜ் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் இருக்கின்றனர். பாக்யராஜ் தனது மகன் சாந்தனுவை சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களில் சாந்தனு நடித்துள்ளார். சின்னத்திரை தொகுப்பாளரான கீர்த்தியை சாந்தனு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பாக்யராஜுக்கு சரண்யா என்ற மகள் இருப்பது பெரும்பாலானவருக்கு தெரியாது. வெளிநாட்டில் படிக்கும் போது சரண்யா ஒருவரை காதலித்துள்ளார். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் பலமுறை சரண்யா தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இப்போது சரண்யாவுக்கு 39 வயது ஆகிறது. இதுவரை சரண்யா யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது குடும்ப நிகழ்ச்சிகளில் மட்டும் சரண்யா கலந்து கொண்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சரண்யா ஷாப்பிங் மற்றும் ரீடைல் தொழிலை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறார். பெண்கள் ஆடை அணிகலன்கள் சம்பந்தமான பொருட்களை சரண்யா விற்பனை செய்கிறார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பாக்யராஜுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என ஆச்சரியத்தில் உள்ளனர்.

#image_title
