CINEMA
சின்ன மருமகள் சீரியல் ஸ்வேதாவின் காதலர் இவரா..? அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர் அந்த வகையில் விஜய் டிவியில் இரவு 9:30 மணிக்கு சின்ன மருமகள் சீரியல் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது தமிழ்செல்வி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மேலும் நவீன் குமார் ஸ்வேதா சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சீரியலில் டாக்டராகும் கனவுடன் தமிழ்ச்செல்வி இருக்கிறார்.
ஆனால் பிளஸ் டூ படிக்கும் போது தமிழ்ச்செல்விக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதனால் எப்படியாவது தனது கனவை நினைவாக்க வேண்டும் என நினைக்கிறார். சீரியலில் போல்டான கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடிக்கிறார்.ஸ்வேதா தனது மாமியார் வீட்டில் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாக வைத்து கதை நகர்கிறது.
சமீபத்தில் ஸ்வேதா தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றியும் பேசி இருந்தார். விஜய் டிவியில் சின்ன மருமகள் சீரியலில் நடிப்பதற்கு முன்பதாகவே தமிழன் சரஸ்வதியும் சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். என்னோட உயரம் குறைவாக இருப்பதால் என்னை சின்ன பொண்ணுன்னு சொல்றாங்க. எனக்கு 21 வயசு தான். சினிமாவில் நடிக்க வருவது எந்தத் திட்டமும் எனக்கு கிடையாது என கூறியுள்ளார்.
மேலும் சீரியலில் பள்ளிப் பெண்ணாக இருந்து திருமண வாழ்க்கைக்குள் நுழையும் ஸ்வேதா நிஜத்திலும் தனது பள்ளி பருவத்தில் நடந்த அனுபவங்கள் பற்றி பேசி இருந்தார். இந்த நிலையில் ஸ்வேதா தனது காதலருடன் வெளியில் சுற்றிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக வைத்துள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் ஸ்வேதா காதலிக்கும் நபர் யார்? உங்கள் காதலரின் முகத்தை காட்டுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.