Connect with us

இறக்கும் தருவாயில் பாலுமகேந்திரா கேட்ட இரண்டு சத்தியம்… ஒரே ஒரு சத்தியம் மட்டுமே செய்த மௌனிகா…

CINEMA

இறக்கும் தருவாயில் பாலுமகேந்திரா கேட்ட இரண்டு சத்தியம்… ஒரே ஒரு சத்தியம் மட்டுமே செய்த மௌனிகா…

மௌனிகா தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகை ஆவார். இவரின் மேடை பெயர் விஜய ரேகா என்றும் கூறுவர். இவர் 1985 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கிய உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 1991 இல் தாலாட்டு கேக்குதம்மா, 1992 இல் வண்ண வண்ண பூக்கள், சமீபத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான கடைக்குட்டி சிங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மௌனிகா. இது மட்டுமல்லாமல் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து புகழ்பெற்றவர் மௌனிகா.

   

மௌனிகா இயக்குனர் பாலு மகேந்திரா உடன் சேர்ந்து வாழ்ந்தார். 1996 இல் இருந்தே பாலுமகேந்திராவும் மௌனிகாவும் ஒன்றாக வாழ தொடங்கினர். 1998ல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 2004 ஆம் ஆண்டில் தான் பாலுமகேந்திராவும் மௌனிகாவும் அவர்களது திருமணத்தை பகிரங்கமாக வெளியுலகத்திற்கு கூறினர். மோனிகா பாலு மகேந்திராவின் மூன்றாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

   

பாலு மகேந்திரா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் வலம் வந்தவர். கோகிலா, அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியவர். அப்படிப்பட்ட பாலு மகேந்திராவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட மௌனிகாவுக்கும் அவருக்கும் முப்பது வயது வித்தியாசம் இருந்திருக்கிறது. வயதை பொருட்படுத்தாமல் பாலுமகேந்திராவை காதலித்திருக்கிறார் மௌனிகா.

 

சமீபத்தில் ஒரு நேர்காணியில் கலந்து கொண்ட மௌனிகா பாலு மகேந்திரா பற்றி உருக்கமாக பேசியுள்ளார். அதில் அவர் இறக்கும் தருவாயில் பாலுமகேந்திரா மௌனிகாவிடம் இரண்டு சத்தியம் கேட்டாராம். அந்த சத்தியத்தைப் பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார் மௌனிகா.

மௌனிகா கூறியது என்னவென்றால், பாலுமகேந்திரா இறக்கும் தருவாயில் இருக்கும்போது என்னிடம் இரண்டு சத்தியங்கள் கேட்டார். ஒரு சத்தியம் நான் இறந்த பிறகு நீ தொடர்ந்து சினிமாவுல எல்லா இயக்குனர்களோடும் பணிபுரிந்து நடிக்கணும் அப்படிங்கறது. இரண்டாவது சத்தியம் நான் இறந்த பிறகு நீ வேறொரு திருமணம் செஞ்சுக்கணும் அப்படின்னு சொன்னாரு. நான் முதல் சத்தியம் அவருக்கு பண்ணி கொடுத்துட்டேன். இரண்டாவது சத்தியத்தை நான் பண்ணி கொடுக்கல. ஏன்னா அவர் இடத்துல வேற ஒருத்தரை வச்சு என்னால பார்க்க முடியாது, பார்க்கவும் மாட்டேன் என்று கூறியுள்ளார் மௌனிகா.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top