Connect with us

லவ் பண்ணினவன் விட்டுட்டு போய்ட்டா ஏன் அழனும்… ஷூட்டிங் ஸ்பாட்டில் வாக்குவாதம் செய்த நடிகை லட்சுமி…

CINEMA

லவ் பண்ணினவன் விட்டுட்டு போய்ட்டா ஏன் அழனும்… ஷூட்டிங் ஸ்பாட்டில் வாக்குவாதம் செய்த நடிகை லட்சுமி…

தமிழ் சினிமாவின் மூத்த நடிகை லட்சுமி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரது தாயார் குமாரி ருக்மணி தமிழ் சினிமாவில் நடித்த நடிகை ஆவார் மற்றும் அவரது தந்தை யாரகுடிபாடி வரதராவ் தெலுங்கு சினிமாவின் தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் எடிட்டர் ஆவார். மேலும் லட்சுமி அவர்களின் தந்தை நடிகராக தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். தனது தாய் மற்றும் தந்தையர் சினிமா துறையை சார்ந்ததால் லட்சுமி அவர்களுக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தது.

   

லட்சுமி 1970களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல பக்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் லட்சுமி. தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார் லட்சுமி. தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் லட்சுமி.

   

லட்சுமி தமிழ் சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாமல் சின்னத்திரை தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பேச்சாளராகவும் இருந்துள்ளார். சின்னத்திரையில் தமிழ் பேச்சு நிகழ்ச்சியான அச்சமில்லை அச்சமில்லை உட்பட இரண்டு பேச்சு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் லட்சுமி.

 

தனது நடிப்பிற்காக 10 ஃபிலிம்பேர் விருதுகள், ஒரு தேசிய திரைப்பட விருது, ஒரு சினிமா எக்ஸ்பிரஸ் விருது, நான்கு நந்தி விருதுகள், மூன்று கர்நாடக மாநில திரைப்பட விருதுகள், ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, ஒரு கேரள மாநில திரைப்பட விருது, ஒரு பெங்காலி திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார் லட்சுமி.

சமீபத்தில் ஒரு நேர்காணியில் கலந்து கொண்ட லட்சுமி தனது திரைப்பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் ஆரம்பத்தில் நான் சினிமாவுக்கு வந்த புதிதில் அழுகிற சீன் எல்லாம் எனக்கு நடிக்கவே வராது. அப்போ அந்த காலத்தில் புருஷன் ஓடி போய்ட்டா, லவ் பண்ணினவ ஓடிப்போயிட்டான் அப்படின்னா அது பெரிய துக்கமா அந்த காட்சிகள் எல்லாம் எடுப்பாங்க.

அப்படி ஒரு படத்தோட காட்சியில லவ் பண்ண பையன் விட்டுட்டு போயிட்டான், நீங்க அழனும் அப்படின்னு எனக்கு சீனு சொன்னாங்க. ஆனா நான் திரும்பி வாக்குவாதம் பண்ணேன். லவ் பண்ண பையன் விட்டுட்டு போயிட்டா நாம எதுக்கு அழனும். அவனுக்கு பிடிக்கலனா அவன் போறான். இது எதுக்கு அழணும் அப்படின்னு சொல்லிட்டு நான் திருப்பி ரொம்ப ஆர்க்யூமெண்ட் பண்ணினேன். அப்புறம் ஒரு வழியா ஏம்மா நீ எப்படி இருந்தாலும் பரவால்ல, படத்தோட ஸ்கிரிப்ட்ல நீ அழதான் செய்யணும் அப்படின்னு சொல்லி என்னை சமாதானப்படுத்தி நடிக்க வச்சாங்க என்று கூறியுள்ளார் லட்சுமி.

More in CINEMA

To Top