“உங்க அம்மா தான் சூனியம் வச்சிருக்காங்க” அதான் உங்க அப்பா செத்துட்டாரு…ஜோதிடர் பேச்சைக் கேட்டுப் பெற்ற தாயையே கொன்ற மகள்… மூடநம்பிக்கையின் உச்சம்…!!

Spread the love

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் ஜோதிடரின் பேச்சை நம்பி, பெற்ற தாயையே மகள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுசித்ரா (33) என்பவரின் தந்தை 18 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரது மரணம் குறித்து ஒரு ஜோதிடரிடம் சுசித்ரா ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது அந்த ஜோதிடர், சுசித்ராவின் தாயாரே தனது கணவருக்குச் சூனியம் வைத்து அவரைக் கொன்றதாகக் கூறி விஷத்தைக் கக்கியுள்ளார். இதனைத் தீர விசாரிக்காமல் அப்படியே நம்பிய சுசித்ரா, தனது தாயார் மீதான வன்மத்தை வளர்த்துக்கொண்டு அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தாய் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, சுசித்ரா தலையணையால் அவர் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து படுகொலை செய்துள்ளார். கொலை செய்த பின்னர், தனது தாய் இயற்கையாகவே இறந்துவிட்டது போல நாடகமாடித் தப்பிக்க முயன்றார். இருப்பினும், சுசித்ராவின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த காவல்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், ஜோதிடரின் பேச்சைக் கேட்டுத் தாயைக் கொன்ற உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். மூடநம்பிக்கையால் ஒரு குடும்பமே சிதைந்து போன இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

போடு ரகிட ரகிட… ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்… தமிழக அரசின் அடுத்த அதிரடி…!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…

3 minutes ago

“இனி அந்த சலுகை கிடையாது!”… இந்தியாவிற்கு அமெரிக்கா போட்ட ‘செக்’… ட்ரம்ப் 2.0 ஆட்டம் ஆரம்பம்… ஷாக் நியூஸ்…!

சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…

11 minutes ago

FLASH NEWS: மீண்டும் ரூ.1.15 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை… ஒரே நாளில் புதிய உச்சம்… காலையிலேயே ஷாக்…!

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…

23 minutes ago

தங்கம் ஒரு சவரன் ரூ.2 லட்சமா?.. சர்வதேச சந்தையில் நடக்கும் ‘கோல்டு பிளான்’.. கோல்ட் குரு வெளியிட்ட பகீர் தகவல்…!

தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…

26 minutes ago

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

34 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ… அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…

38 minutes ago