தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் சிகல்குடா பகுதியில் உள்ள எருகள வஸ்தி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக விஜயலட்சுமி என்ற பெண் தனது 65 வயதான மாமியார் பத்மாவதியை கத்தியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் திடீர் தாக்குதலில் பத்மாவதிக்குக் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரைக் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் பத்மாவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சிகல்குடா காவல்துறையினர், தாக்குதலுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும், குடும்பப் பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
