மருதாணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் சின்னத்திரை நடிகர் நேத்திரன். இவர் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியவர். இவர் சீரியல் நடிகை தீபாவை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இரண்டு மகள்களும் சீரியல்களில் தான் நடித்து வருகிறார்கள். நேத்ரன் ஒரு சில படங்களிலும் துணை நடிகராக நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கேன்சர் இருப்பதாக சமீபத்தில்அவருடைய மகள் அபிநயா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

#image_title
இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகினர். அப்பாவுக்கு கேன்சர் நோய் என்று தெரிந்தது மருத்துவமனையில் சேர்த்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மகள்கள் அபிநயா மற்றும் அஞ்சனா இருவரும் தவிர்த்து வந்துள்ளனர்.

#image_title
ஆனால் அவர்களுடைய அனைத்து முயற்சிகளும் வீணாக போய்விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக நேத்ரன் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். தந்தையின் மரணம் மீளா துயரில் இரு மகள்களையும் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவருடைய மகள் அஞ்சனா வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், உங்களை ஒரு ஹீரோவாக பார்க்க உலகம் தவறிவிட்டது,

#image_title
ஆனால் எங்களுக்கு, அப்பா நீங்கள் எப்போதும் எங்கள் மிகப் பெரிய மற்றும் ஒரே பிடித்த ஹீரோவாக இருந்தீர்கள். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போனது உங்கள் தவறல்ல. நாங்கள் செய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
