சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார். முதல் சீரியலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் பிரபலமான சீரியல் நடிகையாக மாறினார். இதே சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

நட்சத்திர ஜோடியாக வலம் வரும் இவர்களுக்கு அய்லா சையத் என்ற பெண் குழந்தை பிறந்தது.இதையடுத்து ‘ராஜா ராணி 2’ சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகினார். இவர்களுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. மீண்டும் ஆல்யா, எப்போது நடிப்பால் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

#image_title
தற்பொழுது இவர் தனது உடல் எடையை வெகுவாக குறித்து தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘இனியா’ சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

#image_title
சமீபத்தில் இந்த ஜோடி கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட வீடு ஒன்று கட்டியுள்ளார்கள். இந்நிலையில் ஆல்யா தற்போது சொந்தமாக போட் ஹவுஸ் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். அந்த போட் ஹவுஸின் விலை சுமார் ரூ. 2 கோடியாம்.

அதில் நவீன வசதிகளுடன் கூடிய படுக்கையறைகள், பிரம்மாண்ட டைனிங் ஹால் என அனைத்து வசதிகளுமே உள்ளதாம். புது பிசினஸில் காலடி எடுத்து வைத்துள்ள இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
