விஷாலை உண்மையாக காதலிக்கிறாரா தர்ஷிகா ..? வெளியில் வந்ததும் அவரே சொன்ன விஷயம்..!

By Soundarya on டிசம்பர் 24, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் நிகழ்ச்சி முடிய 2 வாரங்கள் மட்டுமே இருக்கிறது.

   

இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி வந்தாலும் இன்னும் சிலர் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக கேம் விளையாடி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். ரஞ்சித், தர்ஷிகா, சத்யா ஆகியோர் வெளியேறியுள்ளார்கள். தற்போது பிக் பாஸ் வீட்டில் 12 போட்டியாளர்கள் உள்ளார்கள். ஒவ்வொரு பிக் பாஸ் சீசன்களிலும் காதல் குறித்து சர்ச்சை உருவாகும்.

   

 

ஆரவ் – ஓவியா, கவின் – லாஸ்லியா என இவர்களின் பெயர்கள் காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பின் அப்படி எதுவும் இல்லை என அவர்களே கூறியுள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் 8ல் காதல் ஜோடிகள் என்று விஷால் – தர்ஷிகாவை பார்க்கிறார்கள். தர்ஷிகா 70 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள்லிருந்து எலிமினேட் ஆன நிலையில், விஜய் டிவியின் பிக்பாஸ் அன்லிமிடெட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதில் தொகுப்பாளர் கேட்கும் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து வந்தார். அப்போது, “விஷாலை காதலிக்கிறீர்களா?” என்று நேரடியாக தொகுப்பாளர் கேள்வி கேட்டதற்கு அதற்கு விஷால் மீது க்ரஷ் இருக்கிறது, அவரை பிடிக்கும், ஆனால் காதலிக்கவில்லை” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.