kps

இந்திய சினிமாவிலேயே முதலாவதாக அதிக சம்பளம் வாங்கிய தமிழ் நடிகை KP சுந்தராம்பாள்… எத்தனை லட்சம் தெரியுமா…?

By Meena on டிசம்பர் 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பணியாற்றிய மிகப் பழம்பெரும் நடிகை KP சுந்தராம்பாள். இவரது முழு பெயர் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் என்பதாகும். தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மீகம் என பல துறைகளிலும் புகழ்பெற்று திகழ்ந்தவர் KP சுந்தராம்பாள். இவர் ஆரம்பத்தில் குடும்ப வறுமைக்காக ரயில்களில் பாடி பிச்சை எடுத்து வந்ததாகவும், இவரது திறமையை கண்ட நடராசயர் என்பவர் நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

   

நாடக கம்பெனியில் சேர்ந்த KP சுந்தராம்பாள் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் 1927 ஆம் ஆண்டு KP சுந்தராம்பாள் சக நாடக நடிகர் ஆன கிட்டப்பாவை திருமணம் செய்து கொண்டார். பிறகு 1933 இல் கிட்டப்பா காலமானார். அப்போது KP சுந்தராம்பாளுக்கு வயது 25 தான். அன்றிலிருந்து வெள்ளை சேலை கட்ட தொடங்கினார் KP சுந்தராம்பாள். கணவர்ந்ததால் எந்த ஒரு ஆண் நடிகருடன் ஜோடியாக இணைந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதை கடைசி வரை காப்பாற்றினார் KP சுந்தராம்பாள்.

   

படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பாடல்களையும் பாடியுள்ளார் KP சுந்தராம்பாள். 1935 ஆம் ஆண்டு “பக்த நந்தனார்” எனும் படத்தில் நந்தனார் வேடம் ஏற்று நடித்தார் KP சுந்தராம்பாள். இந்த படத்தில் மொத்தம் 41 பாடல்கள் இருந்தது. அதில் 19 பாடல்களை KP சுந்தராம்பாள் பாடியிருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக இவர் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார். இந்திய சினிமாவிலேயே அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நபர் தமிழ் நடிகை KP சுந்தராம்பாள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மணிமேகலை, அவ்வையார், பூம்புகார், கந்தன் கருணை, திருவிளையாடல், திருமலை தெய்வம் என பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தார் KP சுந்தராம்பாள்.

 

இது மட்டுமல்லாமல் பல பக்தி படங்களில் பாடலும் பாடியிருக்கிறார் கப் சுந்தராம்பாள். இவர் அதிகபட்சமாக 1973 ஆம் ஆண்டு வெளியான காரைக்கால் அம்மையார் திரைப்படத்திற்கு 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது திறமைக்காக பத்மஸ்ரீ விருது சிறந்த தேசிய பின்னணி பாடகர் விருது ஆகியவற்றை வென்றிருக்கிறார். நடிப்பது மட்டுமல்லாமல் காங்கிரஸ் பிரச்சாரங்களில் ஈடுபட்டு இருக்கிறார். இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1958 ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். இவர் வயது மூப்பு காரணமாக 1980 ஆம் ஆண்டு காலமானார்.