48 வயதில் இறந்த நடிகர் டேனியல் பாலாஜி.. மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்.. காண்போரை உருக்கும் வீடியோ

By Priya Ram on ஏப்ரல் 1, 2024

Spread the love

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் புரசைவாக்கத்தில் இருக்கும் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. டேனியல் பாலாஜி இறந்ததை அறிந்ததும் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

   

இவர் மறைந்த நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரர் ஆவார். 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் டேனியல் பாலாஜி திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார். சித்தி, அலைகள் ஆகிய 2 சூப்பர் ஹிட் சீரியல்களில் டேனியல் பாலாஜி நடித்துள்ளார்.

   

 

டேனியல் பாலாஜி பொல்லாதவன் படத்தில் ரவி, வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் ஆகிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். காக்க காக்க,  பைரவா, வடசென்னை ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 48 வயதாகியும் நடிகர் டேனியல் பாலாஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் தனது மகனின் உடலை பார்த்து டானியல் பாலாஜியின் தாய் கதறி அழுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த பொதுமக்கள் டேனியல் பாலாஜியின் தாய்க்கு ஆறுதல் கூறி அவரது மகனின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.