கேடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் தமன்னா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்த தமன்னா தெலுங்கு, தமிழ் படங்களில் பெரிய பெரிய ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தும் பிரபலமானார். குறிப்பாக படிக்காதவன், அயன், பையா படங்கள் தமன்னாவை மேலும் மக்களிடம் நெருக்கம் ஆக்கியது.

Tamanna in aranmanai promotions
தொடர்ந்து பிசியாக நடித்து வந்த தமன்னா இப்போது பாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு அரண்மனை 4 படம் மூலம் மீண்டும் தமன்னா தமிழில் நடிக்கிறார். இந்தநிலையில் அரண்மனை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமன்னா பேட்டியின் இடையே செம்ம டென்ஷானாகி விட்டார்.

Tamanna about sura film
தமன்னாவிடம், நீங்கள் சுறா படம் செய்திருக்க கூடாது என கூறினீர்கள் என சொல்லும்போது அவர் டென்ஷானாகி விட்டார். அதை மறுத்த தமன்னா கூறியதாவது, இல்லை நான் அப்படி சொல்லவில்லை. சுறா படத்தில் நான் சிறப்பாக நடிக்கவில்லை என்று தான் கூறினேன், ஏன் மீடியா நாங்கள் சொல்வதை திரித்து வெளியிடுகிறீர்கள். நான் சுறா செய்திருக்க கூடாது என சொல்லவே இல்லை. தயவு செய்து அப்படி சொல்லாதீர்கள் என கூறினார்.