வடிவேலு உன்ன கால வாரப்போறான்; பிரபல இயக்குனரை எச்சரித்த கவுண்டமணி

By Deepika on ஏப்ரல் 1, 2024

Spread the love

வரவு எட்டண்ணா செலவு பத்தணா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, விரலுக்கேத்த வீக்கம் என பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் வி.சேகர். குடும்ப படங்களை எடுப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை என்று சொன்னால் அது மிகையாகாது. காமெடி, குடும்பமும் கலந்து இவர் ஓயாக்கிய அணைத்து படங்களும் சூப்பர்ஹிட்.

Director V Sekar

இப்போதும் டிவியில் இவர் படங்கள் போட்டால், நாம் அனைவரும் விரும்பி பார்ப்போம் அப்படிப்பட்ட இந்த இயக்குனர் தான் வடிவேலு வளர்வதற்கு பிள்ளையார் சுழி போட்டதே. ஆம், வடிவேலு மீது நம்பிக்கை வைத்து அவருக்கு வாய்ப்பு கொடுத்து, அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்பு கொடுத்ததே இயக்குனர் சேகர் தான். ஆனால் அப்படிப்பட்ட நபரை தான் அடியோடு அவாய்ட் செய்தார் நடிகர் வடிவேலு.

   
   

Vadivelu

 

வடிவேலு உடன் பணியாற்றிய சக நடிகர்கள், எப்படி வடிவேலு தங்களை வளரவிடாமல் செய்தார், எப்படி அவர்களின் வாய்ப்புகளை தட்டி பறித்தார் என சமீபகாலமாக நாம் நிறைய கேட்டிருக்கிறோம். அப்படி வடிவேலு செய்த ஒரு சில்லறைத்தனமான செயல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இயக்குனர் சேகர். அவர் கூறியதாவது, வடிவேலுக்கு நான் ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தேன்.

V Sekhar about vadivelu

படமும் நன்றாக ஓடியது, அப்போது வடிவேலுவிடம் சம்பளத்தை பெற்று கொள்ள வர சொன்னேன். அப்போது வடிவேலு, எனக்கு சம்பளம் எல்லாம் வேணாம், இது மூலமாக நான் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டேன். அதுபோதும், மற்ற படங்களில் நடித்து சம்பாதித்து கொள்கிறேன் என்றான். நான் என் கையில் இருந்த ஒரு லட்சத்தை கொடுத்தேன். அடுத்த படம் வாய்ப்பும் அளித்தேன். நான் பெத்த மகன் ஷூட்டிங் நடக்கும்போது வடிவேலு புது காரில் வந்து இறங்கினான். அப்போதே கவுண்டமணி என்னிடம் இவனை எல்லாம் வளர்த்துவிடாதே உனக்கு தான் பிரச்சனை என்றார்.

Goundamani vadivelu and senthil

கார் வாங்கி, படும் அலப்பறை செய்தான், பாத்ரூம் செல்ல வேண்டும் என்றால் கூட கார் எடுத்து தான் செல்வான். என்னை ஏற சொல்லி ஒரு ரவுண்டு போவோம் என்றான். செந்தில், கவுண்டமணி கார்கள் நிற்கும் இடத்திற்கு வேண்டும் என்றே இடிக்கும் படி ஸ்பீடாக சென்று நிறுத்தினான். அவர்களின் ட்ரைவர்கள் இதை கவுண்டமணியிடம் சொல்ல அவர் என்னிடம் கேட்டார். நான் சொன்னேனே அவனை வளர்த்து விடாதே என்று கேட்டாயா இப்போது பார். அதேபோல் உன் காலில் விழுந்து விழுந்து நடிக்கிறான். ஒருநாள் உன் காலை வார போகிறான் பார் என்று எச்சரித்தார். ஆனால் வடிவேலு வளர்ந்த பின் முற்றிலுமாக என்னை அவாய்ட் செய்ய ஆரம்பித்தான் என கூறியுள்ளார் இயக்குனர் சேகர்.