அந்த ஒரு விஷயத்துக்காக நடிப்பே வேண்டான்னு பெட்டியை தூக்கிட்டு கிளம்பிய ராதிகா… சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்த புலியூர்சரோஜா..!

By Nanthini on மாசி 21, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமை எம் ஆர் ராதா. பெரியாரின் தீவிர தொண்டரான அவருக்கு பிறந்தவர் தான் நடிகை ராதிகா. வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்ட இந்தியாவிற்கு வந்திருந்த அவரை பார்த்த பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்தில் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார். ஆனால் முதல் படத்தில் நடிப்பதற்கு ராதிகாவுக்கு விருப்பமே இல்லை. இருந்தாலும் விடாத பாரதிராஜா எப்படியோ அவரிடம் பேசி சம்மதிக்க வைத்து விட்டார். ராதிகாவின் முதல் படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. முக்கியமாக ராதிகாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

நடிகை ராதிகா பிறந்தநாள் ஸ்பெஷல்: எல்லா பரிமாணங்களிலும் வெற்றிபெற்றவர் |  radikaa birthday special - hindutamil.in

   

அதன்படியே ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பில் வித்தியாசத்தையும் காண்பிக்க ஆரம்பித்தார். சினிமாவில் முன்னணியில் இருந்த போது நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனை செய்து கொண்டார். ஆனால் அவர்களது திருமண உறவு பாதியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஒரு கட்டத்தில் ராதிகாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு குறைய ஆரம்பிக்க குணச்சித்திர வேடங்களில் நடித்து ரகளை செய்தார்.

   

என் முன்னாள் மனைவியையும் ராதிகா அரவணைப்பார்.. சரத்குமார் எமோஷனல் டாக் |  Sarathkmar Emotional Talks about Radhika, Here are the details - Tamil  Filmibeat

 

அதன்படி ஜீன்ஸ், சூரியவம்சம் மற்றும் தர்மதுரை உள்ளிட்ட படங்களில் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போதும் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் சித்தி மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். இப்படியான நிலையில் ராதிகா முதலில் சினிமாவில் நடித்த போது ஆட முடியாததால் சினிமாவை விட்டு ஓட நினைத்த சம்பவத்தை டான்ஸ் மாஸ்டர்  புலியூர் சரோஜா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அதில், ஹில்ஸ் போட்டுட்டு வந்த ராதிகா ஒரு நாள் ஷூட்டிங் முடிந்த பிறகு அன்று இரவே பெட்டியை தூக்கிட்டு ஊருக்கு கிளம்ப தயாராகிட்டாங்க.

புலியூர் சரோஜா

 

அப்போ பக்கத்துல படுத்து இருந்த நான் உடனே எழுந்து எங்க கிளம்புற என்று கேட்டேன். எதற்கு அக்கா எனக்கு படம் வேண்டாம் நடிப்பு வேண்டாம் நான் ஊருக்கு கிளம்புறேன் என்னால ஆடி ஆடி கால் எல்லாம் வலிக்குது என்று சொன்னார். அதன் பிறகு ராதிகாவை சமாதானம் பண்ணி, கூட இருந்த அவங்க அம்மாவும் ஆயில்மெண்ட் எல்லாம் வாங்கிட்டு வந்து ராதிகாவுக்கு போட்டு விட்டாங்க. எனக்கு கொடுத்தப்போ எனக்கெல்லாம் மறுத்துப் போச்சு எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டேன். அடுத்த நாள் சூட்டிங்காக வைத்திருந்த டிரஸ் எல்லாம் எடுத்து ராதிகா கிட்ட காட்டி எவ்வளவு அழகாய் இருக்கு பாடல் என்று ரசனை உடன் பேசி கொஞ்சம் கொஞ்சமா சமாதானம் படுத்தி தான் நடிக்க வைத்தேன். கிழக்கே போகும் ரயிலில் படத்தில் தான் அவளை விரட்டி விரட்டி டான்ஸ் ஆட வைத்தேன். இன்று நானே ஆச்சரியப்படும் அளவுக்கு பெரிய நடிகையாக வளர்ந்து நிற்கிறார் என்று ராதிகா பற்றி புலியூர் சரோஜா பேசியுள்ளார்.