பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர் கரண் ஜோகர். இவர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், என பன்முகத் திறன் கொண்டவர். இறுதியாக இவர் தர்மா புரொடக்சன்ஸ் சார்பில் ஆக்சன் படமான ‘கில்’ படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் தன்யா மணிக்தலா, ராகவ் ஜுயல் மற்றும் லக்சயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஆக்சன் திரில்லர் படமான இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து னு ரீவ்ஸ் நடித்த ‘ஜான் விக்’ தொடரை இயக்கிய 87 லெவன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கில் திரைப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளது. இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஏழு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்ற இவர், 2020 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தயாரிப்பாளர் யஷ் ஜோஹரின் மகனான, இவர் குச் குச் ஹோத்தா ஹை என்ற நகைச்சுவை-நாடகத் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கரன்ஜோகர் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு அணிந்து வந்திருந்த ஸ்வெட்டர் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது அதன் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கரன்ஜோகர் அணிந்திருந்த doublet என்ற அந்த ஸ்வெட்டரின் விலை சுமார் 80 ஆயிரம் என கூறப்படுகிறது.
