நான் வாய்ப்பு கேட்டு போனா விஜய் சிரிப்பாரு.. தளபதியின் ஆஸ்தான டான்ஸ் மாஸ்டர் ஓபன் டாக்..!!

By Mahalakshmi on சித்திரை 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக 18 வருடங்களாக கொடி கட்டி பறப்பவர் டான்ஸ் மாஸ்டர் தினேஷ். இவர் ஒரு குப்பை கதை என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாகவும் அறிமுகமானார். அந்த திரைப்படம் சுமாரான அளவு வெற்றியை கொடுத்தது. இவர் விஜயின் ஆஸ்த்தான டான்ஸ் மாஸ்டர் என்று கூறலாம்.

   

இவர் விஜயுடன் சேர்ந்து தமிழன்,யூத்,வசிகரா, சிவகாசி,போக்கிரி, துப்பாக்கி, மாஸ்டர், லியோ போன்ற படங்களுக்கு இவர்தான் நடன இயக்குனராக இருந்தார்.இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் குறித்தும் அவருடன் பணியாற்றியது குறித்தும் பேசியிருந்தார்.அதில் அவர் கூறியிருந்ததாவது.நான் வாய்ப்பு கேட்டு விஜயிடம் போனால் என்னை பார்த்து சிரிப்பார்.

   

 

நான் மாஸ்டரானவுடன் எனக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தது விஜய் தான்.ஷாஜகான் திரைப்படத்தில் மின்னலை பிடித்து மின்னலை பிடித்து பாடலை இயக்கியிருந்தேன்.மூன்று நாள் பாடலை இரண்டே நாளில் முடித்து விட்டார் விஜய்.அதைத்தொடர்ந்து யூத் திரைப்படத்தில் சிம்ரன் ஒரு பாடலுக்கு வந்தது. ஆட்டோட்ட பூபதி நானடா அந்த பாடலுக்கு முதல் இரண்டு நாள் சிம்ரன் வரவே இல்லை.

பின்னர் விஜயை வைத்து தனி போர்ஷன்கள் அனைத்தையும் நான் முடித்து விட்டேன்.எனக்கு அந்த அளவிற்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத காரணத்தினால் இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள்.ஒரு வழியாக மூன்று நாள் கழித்து சிம்ரன் வரவும் பாடலை முடித்து விட்டேன்.இன்று விஜியுடன் தான் செய்த ட்ராவலை பகிர்ந்திருந்தார் தினேஷ் மாஸ்டர்.