யோவ்.. இது கோலமா இல்ல குபேரன் கஜானாவா?… துபாயில் 6.5 கிலோ தங்கம், வைர நகைகளை வச்சு… கோலம் போட்டு ஷாக் கொடுத்த டமாஸ்… வாயடைத்துப் போன இணையவாசிகள்…!!

By Swetha on கார்த்திகை 10, 2026

Spread the love

துபாயில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 6.5 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொண்டு பிரம்மாண்டமான ‘கோல்டன் ரங்கோலி’ உருவாக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள புகழ்பெற்ற ‘சிட்டி சென்டர் டேரா’ வணிக வளாகத்தில் இந்த ஆடம்பரமான கோலம் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இந்திய பண்டிகை அலங்காரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட மற்றும் ஆடம்பரமான வடிவத்தை கொடுக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பிரம்மாண்ட ரங்கோலியை உருவாக்க ‘டமாஸ்’ என்ற பிரபல நகை நிறுவனம் மற்றும் துபாய் விழாக்கள் மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்பட்டுள்ளன. இதில் நெக்லஸ்கள், வளையல்கள், காதணிகள் மற்றும் பதக்கங்கள் என மொத்தம் 213 விதமான விலையுயர்ந்த நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நுணுக்கமான கலைப்படைப்பை உருவாக்குவதற்காக 10 பேர் கொண்ட குழுவினர் சுமார் 16 மணி நேரம் கைகளால் ஒவ்வொன்றாகச் சேர்த்து கடினமாக உழைத்துள்ளனர். பாலிவுட் பிரபல நடிகை தமன்னா பாட்டியா இந்த கோல்டன் ரங்கோலி தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

   

https://www.instagram.com/reel/DfcIRBpKON5/?utm_source=ig_web_button_share_sheet

   

துபாயின் இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ரங்கோலி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் வியந்து பாராட்டி வருவதுடன், “இது துபாயில் மட்டுமே சாத்தியம்” என்று தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இது தவிர, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துபாய் முழுவதும் உள்ள 180-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் 1 கிலோ தங்கம் வரை வெல்லக்கூடிய ‘திவாலி கோல்ட் ரஷ்’ போன்ற சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.