தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக அதிமுக போடும் அரசியல் மாஸ்டர் பிளான்…. CM விஜய்க்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சிக்கல்….!

By Nanthini on கார்த்திகை 10, 2026

Spread the love

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகர் முன்பு நடைபெறவுள்ள இந்த மூன்று நாள் குறுக்கு விசாரணை, தற்போதைய அரசியல் சூழலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, நோட்டீஸ் பெறப்பட்ட நான்கு பேரில் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-க்களாகப் பதவியில் உள்ளனர். இவர்கள் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் புகாரளிக்கப்பட்டிருப்பது, தவெக கட்சிக்கு ஒரு புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் சட்டப்பேரவை அளவில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான விவாதங்களை உருவாக்குவதோடு, தவெகவின் தொடக்கக் கால அரசியல் நகர்வுகளுக்கும் சோதனைக்காலமாக மாறியுள்ளது. குறுக்கு விசாரணை முடிவில் சபாநாயகர் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் மற்றும் தவெக எம்.எல்.ஏ-க்களின் தற்காப்பு வாதங்கள் என்னவாக இருக்கும் என்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழல் எதிர்காலத்தில் சட்டப்பேரவைக்குள் புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.