கேரள முறைப்படி.. சிறப்பாக நடந்து முடிந்த டாடா பட நடிகை அபர்ணாதாஸ் திருமணம்.. தாலி கட்டிய வைரல் வீடியோ..!

By Mahalakshmi

Published on:

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் அபர்ணாதாஸ். இந்த திரைப்படம் அந்த அளவுக்கு அவருக்கு வரவேற்பு கொடுக்கவில்லை என்றாலும் நடிகர் கவின் உடன் சேர்ந்து டாடா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.

   

இளைஞர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை அபர்ணாதாஸ் மிகப்பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று திருமண தேதியை அறிவித்தார். இவர் மலையாள நடிகர் ஆன தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கின்றார்.

இவர் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகர் நேற்று ஹல்தி தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இருந்த நிலையில் இன்று காலை கேரள முறைப்படி தீபக் மற்றும் அபர்ணாதாஸ் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Siju Wilson (@siju_wilson)

author avatar
Mahalakshmi