தமிழ் சினிமாவில் 1980களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரேவதி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் விஜயகாந்த், கார்த்தி, பிரபு போன்றோருடன் சேர்ந்து நடித்து பிரபலமானார்.
தனது சிறப்பான நடிப்பின் மூலம் ஐந்து முறை பிலிம் பார் விருதை பெற்றுள்ளார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை 1988 காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 27 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2002ல் விவாகரத்து பெற்றனர்.
இதை அடுத்து நடிகை ரேவதி டெஸ்ட் டியூப் மூலம் பெண் குழந்தை ஒன்றை பெற்றுக்கொண்டார். நடிகை ரேவதியின் மகளின் பெயர் மஹி.
தற்பொழுதும் இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரேவதியின் சமீபத்திய புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகை ரேவதியா இது..? நரைத்த முடி, வயதான தோற்றம் என ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.