விஜயும் அவங்க அப்பாவும் முதல்ல என்னை நம்பல….. நேர்ல வந்து பார்த்தாங்க…. மனம் திறந்த டி.இமான்…!!!

By Mahalakshmi on ஐப்பசி 19, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியானது இணையத்தில் வைரலானது. அதுவும் சிவகார்த்திகேயன் பற்றிய பேட்டி தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. சிவகார்த்திகேயனை மொத்தமாக டேமேஜ் செய்து விட்டார் டி இமான். இவர் சிறு வயது முதல் இசையை முறையாக பயின்று சர்ச் மற்றும் நட்சத்திர ஹோட்டலில் பாடல்களை பாடி பின்னர் படங்களில் இசையமைக்க தொடங்கினார்.

   

இவர் முதன்முதலாக விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படத்திற்கு தான் இசையமைத்திருந்தார். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் விஜயின் ஜில்லா திரைப்படத்தில் இசை அமைத்தார். இந்த திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் மைனா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கும்கி, கயல், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றார்.

   

 

அதுவும் சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய டி.இமான் தான் முதன்முதலாக இசை அமைத்த தமிழன் திரைப்படத்தை பற்றி பேசி இருந்தார். அவர் அந்த திரைப்படத்திற்கு ஒப்பந்தமானது முதல் இயக்குனர் கூறியதாவது முதலில் நீங்கள் மியூசிக் போட்டு காட்டுங்கள் எங்களுக்கு அது பிடித்திருந்தால் உங்களை வைத்து படம் செய்கிறோம்.

இல்லை என்றால் வேறு ஒருவரை வைத்து செய்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்களாம். அதை தொடர்ந்து இவர் பாடல்கள் இசை போட்ட உடன் முதலில் இயக்குனர், ப்ரொடியூசர் அதைத் தொடர்ந்து விஜய் அவரின் தந்தை என அனைவரும் வந்து பார்த்து ஒப்புதல் அளித்த பின்னரே அந்தப் படத்திற்கு தனது இசையை வைத்துக் கொண்டதாக தெரிவித்திருந்தார். அதாவது விஜய் மற்றும் அவரது தந்தை முதலில் தனது இசை மீது நம்பிக்கை இல்லாமல் வந்து பார்த்து பின்னரே ஒப்புக்கொண்டதாக கூறினார்.