‘விடாமுயற்சி’க்கு டாடா சொல்லிவிட்டு… லியோ படத்தை பார்க்க வந்த நடிகை த்ரிஷா… வெளியான புகைப்படங்கள்…

By Begam

Published on:

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தில் ஒன்பது மணிக்கு தான் முதல் காட்சி போடப்பட்டது. ஆனால் கேரளா ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு லியோ திரைப்படம் வெளியாகிவிட்டது.

   

லியோ திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதுவரை எந்தவொரு நெகடிவ் கமெண்ட்களையும் தெரிவிக்கவில்லை. நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் பல கோடி சாதனை படைத்துள்ளது. தமிழில் உருவாகி இருக்கும் இப்படத்தை இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்து உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் திரிஷா, மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், அர்ஜுன், மேத்யூ தாமஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.  இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

இன்று ரிலீசான இத்திரைப்படத்தை லியோ படக்குழுவினரும் ரசிகர்களோடு ரோகினி திரையரங்கத்தில் கண்டுகளித்தனர். தற்பொழுது நடிகை திரிஷா சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் லியோ படத்தினை ரசிகர்களுடன் பார்த்து ரசித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.