தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வளம் வருபவர் டி இமான். இவர் சமீபத்தில் அளித்து வரும் பேட்டிகளானது தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது. அதிலும் அவர் சிவகார்த்திகேயன் பற்றி பல விஷயங்களை பேசி இருந்தார். அவர் தனக்கு செய்த துரோகத்தை மன்னிக்க மாட்டேன் மறக்க மாட்டேன். இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து படம் செய்வது என்பது இயலாத காரியம் என்று கூறியிருந்தார்.
இதை கேட்ட பலரும் அப்படி இவர்களுக்குள் என்னதான் சண்டை நடந்தது என்று கேட்டு வருகிறார்கள். மேலும் சினிமா பத்திரிகையாளர்கள் இவர்கள் இருவருக்குள் இதுதான் நடந்தது என்று கூறி பல புரளிகளையும் கிளப்பி விட்டு வருகிறார்கள். ஆனால் எது உண்மை என்பது அவர்கள் கூறினால் மட்டுமே தெரியும். தொடர்ந்து இன்டர்வியூ அளித்து வரும் இமான் மீண்டும் ஒரு புது உண்மையை கூறியிருக்கிறார்.
அதாவது லைவ் கான்செப்ட்களில் நடக்கும் உள்அரசியல்களை அவர் வெளிப்படையாக பேசி இருந்தார். பொதுவாக பெரிய பெரிய இசையமைப்பாளர்கள், பாடகர்கள் லைவ் கான்செப்ட் நடத்துகிறார்கள். ஆனால் அதற்கு வரும் மக்கள் அவர்கள்தான் பாடுகிறார்கள் என்று நம்பி ஏமாந்து விடுகிறார்கள். ஆனால் உண்மை அது கிடையாது. அவர்கள் பாடல்களுக்கு வெறும் லிப் சிங் மட்டுமே செய்து வருகிறார்கள். அது மிகப்பெரிய ஏமாற்று வேலை.
மக்களை ஏமாற்றும் செயல். அப்படி செய்வது மிகவும் தவறான விஷயம் என்று பேசியிருந்தார். அது மட்டும் இல்லாமல் எப்போது அவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள் என்றால் லிப்சிங் சரியாக செய்யாத போது மக்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அப்போதுதான் அவர்களும் உணர்கிறார்கள் அவர் பாடவில்லை என்பதை என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் ஏ ஆர் ரகுமான் கான்செட்டில் நடந்தது சரியா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டி. இமான் ஏ ஆர் ரகுமான் கான்செப்டில் பல உள்அரசியல்கள் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…