80ஸ் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் பேரழகியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவரது இறப்பை பற்றி புலியூர் சரோஜா ஒரு சில தகவல்களை பகிர்ந்து இருக்கின்றார். ஆந்திர மாநிலம் ஏலூரு என்ற இடத்தில் பிறந்தவர் சில்க் ஸ்மிதா. இவரின் இயற்பெயர் விஜயலட்சுமி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஆந்திர மாநிலம் என்றாலும் பூர்வீகம் கரூர். வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு 1970களில் ஒப்பனை கலைஞராக திரைத்துறைக்கு அடி எடுத்து வைத்தவர்.
பின்னர் தமிழ் நடிகரும் இயக்குனருமான வினு சக்கரவர்த்தியின் மூலம் வண்டிச்சக்கரம் என்கின்ற திரைப்படத்தில் சிலுக்கு என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு தான் இவரது பெயர் சில்க் ஸ்மிதா என்று மாறியது. பல திரைப்படங்களில் பல பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருக்கின்றார், ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த இவர் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக மீட்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலையா? என்பது இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கின்றது. அவருக்கு மிகவும் நெருக்கமானவர் நடன கலைஞர் புலியூர் சரோஜா அவர்கள் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் சில்க் ஸ்மிதா பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அவர் மிகவும் அழகாக இருக்கக் கூடியவர் நடனம் ஆடும் போது அவ்வளவு அழகாக எக்ஸ்பிரஷன் கொடுப்பார்.
அவர் அளவுக்கு யாராலும் தற்போது வரை முகபாவணையை கொடுக்க முடியாது. சிலுக்கின் கண்கள் இயற்கையாகவே மிகவும் அழகாக இருக்கும். இத்தனை அழகை ஆண்டவன் யாருக்கும் கொடுக்க மாட்டான். ஆனால் அவருக்கு கொடுத்தார். ஒருமுறை நான் ஷூட்டிங்கில் அமர்ந்திருந்தபோது குரங்கு குட்டி போல் வந்து எனது மடியில் அமர்ந்து கொண்டாள். பிறகு எனது காதில் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என் திருமணத்தை நீங்கள் தான் முன் நின்று நடத்தி வைக்க வேண்டும் என்று கூறினார்.
எந்த நகைகளை போட்டுக் கொள்ள வேண்டும் என்று என்னிடம் காட்டினார். நான் கட்டாயம் திருமணத்திற்கு வருகிறேன் என்று கூறிவிட்டு திருப்பதிக்கு சென்று இருந்தேன். திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வரும்போது தான் எனக்கு தெரிய வந்தது சில்க் ஸ்மிதா இறந்துவிட்டார். அடித்து பிடித்து சென்னைக்கு வருவதற்குள் அவரை அடக்கம் செய்து விட்டனர் என்று மிகவும் உருக்கமாக தெரிவித்து இருந்தார். மேலும் அவர் ஒரு டாக்டர் மகனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்ததாக புலியூர் சரோஜா கூறினார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…