செம மாஸாக நடனமாடி அசத்திய இசையமைப்பாளர் டி இமான்… உங்களுக்குள்ள இவ்ளோ திறமையா?… தீயாய் பரவும் வீடியோ இதோ…

இசையமைப்பாளர் டி இமான் தானே இசையமைத்து பாடிய ஒரு நிமிட பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி இமான். இவர் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் தல அஜித் நடித்த ‘விசுவாசம்’ படத்தில் இவர் இசையில் வெளியான ‘கண்ணான கண்ணே’ மற்றும் அந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது.

இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு இசையமைத்தார். டி இமான் அவர்கள் விஜய் நடிப்பில் 2002ல் வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தற்பொழுது முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டுள்ளார்.

 

பல அறிமுக பாடகர்களுக்கு வாய்ப்பு அளித்த அவர்களை பின்னணி பாடகர்களாக  மாற்றியவர் டி இமான். ‘விசுவாசம்’ திரைப்படத்தில் இவருடைய இசைக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. இவர் தற்பொழுது ‘வள்ளி மயில் ,மலை’ போன்ற படங்களுக்கு இசையமைத்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் டி இமான் ‘கிட்டக்கவாடி’ என்ற ஒரு நிமிட பாடலுக்கு தானே பாடியும், இசையமைத்தும், நடனமாடியும் அசத்தியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by D.Imman (@immancomposer)