ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ் கூறிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… என்ன சொன்னாங்க தெரியுமா?… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்…..

By Begam

Published on:

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை நேஹா  தற்போது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நேஹா மேனன். இவர் கேரள மாநிலம் சாலக்குடியில் பிறந்தவ.ர் தற்போது இவருக்கு வயது 20 ஆகிறது. ஆனால் பார்ப்பதற்கு இன்னும் ஸ்கூல் படிக்கும் பெண்ணை போலவே காட்சியளிக்கின்றார். நடிகை நேஹா குழந்தை நட்சத்திரமாக ‘பைரவி’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

   

இதைத்தொடர்ந்து பிள்ளை நிலா, நிறம் மாறாத பூக்கள், தமிழ்செல்வி, வாணி ராணி, போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்கு மகளாக நடித்தார். தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டி ஆர் பி யில் முன்னணியில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் மகளாக இனியா  கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் மட்டும் இன்றி வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார் நடிகை நேஹா. இவர் சிபிராஜ் நடிப்பில் வெளியான ‘ஜாக்சன் துரை’ திரைப்படத்தில் நடித்துள்ளார்  என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக  இருப்பவர் நடிகை நேஹா. இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது பட்டப் படிப்பை முடித்து அந்த சான்றிதழை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதோ இந்த புகைப்படம்….