தனது புதிய காதலனுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த எமி ஜாக்சன்…. இவ்வளவு நெருக்கமா?… வைரல் புகைப்படம் இதோ…

By Begam

Published on:

நடிகை எமி ஜாக்சன் தனது புதிய காதலனுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை எமி ஜாக்சன். இவர் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ‘மதராசபட்டினம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் முதன் முதலில் அறிமுகமானார். இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் இவர் பிரிட்டிஷ் பெண்ணாகவே நடித்து இருந்தார்.

   

இதை தொடர்ந்து விக்ரமுடன் தாண்டவம், தனுஷ் உடன் தங்க மகன், விஜய்யுடன் தெறி, ரஜினியுடன் 2.0 என பல படங்களில் நடித்த அசத்தியிருந்தார். இதை தொடர்ந்து அவர் தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் திரையுலகில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஜார்ஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரது குழந்தைக்கு தாயாக இருப்பதாகவும் கூறி அதிர்ச்சி கொடுத்தார். குழந்தை பிறந்த பின்னர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்த எமி ஜாக்சன் ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்பொழுது அவரைப் பிரிந்து வேறு ஒருவருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருகிறார் நடிகை எமி ஜாக்சன்.

இதற்கிடையாக அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் சவுதி அரேபியாவின் திரைப்பட விழா ஒன்றில் தனது காதலனுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்பொழுது அவரது ரசிகர்களால் வைரல்  ஆக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….