இனி 25 நாட்களுக்கு ஒருமுறை கேஸ் சிலிண்டர் புக் செய்யலாமா?…. மத்திய அரசு வெளியிட்ட புது ரூல்ஸ்…. சற்றுமுன் குட் நியூஸ்…!

By Nanthini on புரட்டாதி 7, 2026

Spread the love

கிராமப்புறங்களில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 45 நாட்களிலிருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். இதன் மூலம் நகர்ப்புறங்களைப் போலவே இனி கிராமப்புற நுகர்வோரும் 25 நாட்களுக்கு ஒருமுறை புதிய சிலிண்டர்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும். சமையல் எரிவாயு விநியோகச் சங்கிலி சீரடைந்து, நிலுவையில் இருந்த முன்பதிவுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததைத் தொடர்ந்து இந்த முக்கியத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை உடனடியாக அமல்படுத்துமாறு அனைத்து பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கிராமப்புறப் பகுதிகளில் எல்பிஜி உருளைகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்வதோடு, நுகர்வோர் தேவைகளை விரைவாகப் பூர்த்தி செய்யவும் பெருமளவில் உதவும். இதனால், நாடு முழுவதும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற நுகர்வோருக்கு இடையிலான எரிவாயு விநியோகச் சேவைச் சமநிலை மேலும் வலுப்பெற்றுள்ளது.