திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கடையில் பஜ்ஜி சாப்பிட்ட ஸ்ரீத்திகா என்ற 9 வயது சிறுமிக்குத் திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உணவுப் பண்டத்தைச் சாப்பிட்ட உடனே சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால், அவர் உட்கொண்ட உணவில் ஏதேனும் நச்சுத்தன்மை இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள காவல்துறையினர், சம்பந்தப்பட்ட கடையிலும் ஆய்வு மேற்கொண்டு இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
