தமிழ்நாடு அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்புகள் கூடிக்கொண்டே போகின்றன. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் பலர் அக்கட்சியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே அதிமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் 6 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரின் இணைப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களைத் தொடர்ந்து, வட மாவட்டங்களில் அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் தவெக பக்கம் செல்ல தீவிரமாக முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சி.வி.சண்முகத்தை கட்சியில் இணைக்க தவெக தலைமை பச்சைக்கொடி காட்டிவிட்ட போதிலும், தற்போதைக்கு ஒரு முக்கிய ‘டிமாண்ட்’ இந்த இணைப்பைத் தாமதமாக்கி வருகிறது. தவெகவில் தனக்கு மாநில அளவிலான உயர் பதவி வேண்டும் என்று சி.வி.சண்முகம் எதிர்பார்ப்பதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. வட மாவட்டங்களில் தவெகவின் கட்டமைப்பை வலுப்படுத்த சி.வி.சண்முகம் போன்ற ஒரு மூத்த தலைவர் தேவை என்பதால், தவெக தலைமை இதுகுறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதனால்தான் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “நான் அதிமுகவில் இருக்கிறேனா, இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும்” என்று சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
துவக்கத்தில் தவெக ஆட்சி அமைத்த பிறகும் அதிமுகவிலேயே தொடர நினைத்த சி.வி.சண்முகம், இந்த அதிரடி முடிவை எடுத்ததற்கு உட்கட்சிப் பூசல்களே முக்கியக் காரணம். அதிமுகவில் அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் கட்சிப் பதவிகளை வழங்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால், இனி அதிமுகவில் நீடிப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு சி.வி.சண்முகம் தரப்பு வந்துவிட்டது. இவருடன் சேர்த்து சங்கராபுரம் எம்.எல்.ஏ ராகேஷ், திருத்தணி எம்.எல்.ஏ ஹரி, புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழித் தேவன் ஆகியோரும் தவெக பக்கம் சாயத் தயாராகிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
தற்போது இடைத்தேர்தலுக்கு நீதிமன்றம் விதித்துள்ள தடை மற்றும் ஆளுநரிடம் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் அளித்துள்ள குதிரை பேரப் புகார்கள் காரணமாக, தவெக தலைமை தற்சமயம் நிதானமாக காய்களை நகர்த்த முடிவு செய்துள்ளது. எனினும், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்த இணைப்பு விழா பிரம்மாண்டமாக சாத்தியமாகும் என்று இருதரப்பிலும் நம்பிக்கையோடு கூறுகின்றனர். ஒருவேளை சி.வி.சண்முகம் தவெகவில் இணையும் பட்சத்தில், விழுப்புர மண்டலத்தில் தவெக அசுர பலம் பெறும் என்பதில் சந்தேகமில்லை; அதே நேரத்தில், இது அதிமுகவின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் உடைக்கும் ஒரு பேரிடியாக மாறும் என்றும் பார்க்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…
கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…