அதிமுகவின் தொடர் தேர்தல் தோல்விகள் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் எழுப்பியுள்ள காரசாரமான விமர்சனங்கள், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் என எதிலுமே அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை என்று சாடியுள்ள அவர், கட்சியின் இந்த வீழ்ச்சிக்குத் தலைமையின் செயல்பாடுகளே காரணம் என வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த செல்வாக்கால் மட்டுமே 44 தொகுதிகளில் அதிமுக வென்றதாக ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி கூறிய கூற்றையும் சி.வி. சண்முகம் கடுமையாக மறுத்துள்ளார். “47 தொகுதிகளில் மட்டும்தான் எடப்பாடியாருக்குச் செல்வாக்கு என்றால், மீதமுள்ள தொகுதிகளில் அவருக்குச் செல்வாக்கு இல்லையா?” என்று கேள்வி எழுப்பிய அவர், எடப்பாடியாரின் சொந்த மாவட்டமான சேலையிலேயே 7 தொகுதிகளில் கட்சி தோல்வியடைந்ததையும் சுட்டிக்காட்டினார். மேலும், வட மாவட்டங்களில் அதிமுக பெற்ற வெற்றிக்குக் கூட்டணி கட்சியான பாமகவே காரணம் என்றும், வெற்றி பெற்றால் எடப்பாடியாருக்குப் பெருமை, தோற்றால் மாவட்டச் செயலாளர்கள் மீது பழியா என்ற ரீதியில் தலைமை செயல்படுவதாகவும் சாடினார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற வட மாவட்டங்களில் அதிமுக முழமையாகத் தோல்வியடைந்ததையும், தென் மாவட்டங்களில் பூஜ்ஜிய நிலைக்குத் தள்ளப்பட்டதையும் குறிப்பிட்ட அவர், இந்தச் சரிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “தோல்விக்குக் காரணம் ஏற்று உலகில் பல முன்னணித் தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்; அண்மையில் காங்கிரஸின் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தியும் ராஜினாமா செய்தார்” என்பதை நினைவுகூர்ந்த அவர், அதிமுகவின் இத்தகைய தொடர் தோல்விகளுக்குத் தலைமையே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்பதைத் திட்டவட்டமாக உணர்த்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே தெருவில் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில், அக்குழந்தை…
ஆந்திர மாநிலத்தில் வகுப்பறைக்குள் புகுந்து 10-ஆம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் ரம்பத்தால் கொடூரமாகத் தாக்கிய குற்றவாளி ஹேமந்தின் வலது…
தமிழகத்தில் வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால்…
ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் விஜய்யின் வாகனம் முன்பாகத் தொண்டர் ஒருவர் திடீரெனக் குறுக்கே பாய்ந்த…
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் பங்குகள் கண்ட பிரம்மாண்ட ஏற்றத்தின் மூலம் ஒரே நாளில்…
நேபாள நாட்டின் எவரெஸ்ட் மலைப் பகுதியில் உள்ள ஹெலிபேடில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், சென்னையைச் சேர்ந்த…