அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அரசியல் திருப்பங்கள், தமிழக அரசியலையே பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதிலிருந்து கட்சிக்குள் அதிருப்தி பெருகத் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்புகளுக்கு இடையே நிலவி வந்த உட்கட்சிப் பூசல், தற்போது “மன்னிப்பு கடிதம்” என்ற நிபந்தனையால் புதிய வெடிகுண்டாக மாறியிருக்கிறது. சமாதான முயற்சிகள் கைகொடுக்காத நிலையில், “அதெல்லாம் முடியாது! எனக்கு கட்சியே வேண்டாம்” என்று சி.வி.சண்முகம் கோபத்துடன் வெளியேறியதாக வெளியாகும் தகவல்கள் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தது கட்சித் தலைமைக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இதையடுத்து, வேலுமணி – சி.வி.சண்முகம் அணியில் இருந்த நிர்வாகிகளின் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்ததோடு, அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடமும் மனு அளித்தார். இதற்கு பதிலடியாக வேலுமணி தரப்பும் இ.பி.எஸ்-க்கு எதிராக களம் இறங்கியது. இந்த மோதல்களுக்கு இடையே, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா உள்ளிட்ட முக்கிய எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது அதிமுக தலைமையை கடும் அவசர நிலைக்கு தள்ளியது.
கட்சியை உடைவிலிருந்து காப்பாற்ற சென்னை முக்கிய நிர்வாகி இல்லத்தில் இருதரப்பும் சுமார் 4 மணி நேரம் அவசர ஆலோசனை நடத்தின. அப்போது, “வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும், நீக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும்” போன்ற நிபந்தனைகளை வேலுமணி தரப்பு முன்வைத்தது. ஆனால், வழிகாட்டுதல் குழு அமைப்பது தனது அதிகாரத்தைக் குறைக்கும் என எண்ணிய எடப்பாடி பழனிசாமி அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த இழுபறிக்கு நடுவே, இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் போது, “மீண்டும் இணைய வேண்டுமெனில், முதலில் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும்” என்று இ.பி.எஸ் தரப்பு நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது. இதுவே வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பை கடுமையாக அதிர்ச்சியடைய வைத்தது.
“நாங்கள் என்ன தவறு செய்தோம்? ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?” என்று ஆவேசமடைந்த சி.வி.சண்முகம், தனது அலுவலகத்தில் சி.விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். “இனி அதிமுகவில் இருக்கலாமா? அல்லது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையலாமா?” என்ற கோணத்திலும் விவாதங்கள் நகர்வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் தவெக, அதிமுக அதிருப்தியாளர்களை அமைதியாகத் தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்க, மறுபுறம் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மறுக்கிறார். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானை உடைந்த கதையாக, “மன்னிப்பு கடிதம்” என்ற ஒற்றை வார்த்தை அதிமுகவின் முக்கிய தூண்களை மீண்டும் ஒரு பெரிய பிளவை நோக்கி தள்ளியிருக்கிறது.
தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், வரும் ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…
தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…
வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…
சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…