மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியில், சாலையில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த நபரிடம் நூதன முறையில் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அந்த நபரிடம் “எங்களை ஏன் கோபமாக முறைத்துப் பார்க்கிறாய்?” என்று கூறி அநாவசியமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டி அவரிடமிருந்த 15 ஆயிரம் ரூபாயை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏரவாடா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக அப்பகுதியில் இருந்த சுமார் 87 சிசிடிவி கேமராக்களின் பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்பட்ட இந்த விசாரணையின் முடிவில், ஹடப்சர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பழைய குற்றவாளிகளைப் பிடித்து காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…
வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…
சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…