கருணாநிதியின் மஞ்சள் துண்டுக்கு பின்னால் இவ்வளவு பெரிய காரணமா?…. ஷாக்கிங் உண்மை….. சட்டசபையை உலுக்கிய அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சு….!

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் நடந்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் எச்சரிக்கைக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “ஜோசியக்காரன் சொன்னால் தான் கோப்புகளை திறந்து பார்த்து நடவடிக்கை எடுப்பீர்களா?” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், “ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் ஏற்கனவே தமிழ்நாடு பார்த்துவிட்டது” எனக் குறிப்பிட்டார். இந்த கருத்து மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை மறைமுகமாக விமர்சித்து பேசப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

ஆனால், கலைஞர் கருணாநிதி மஞ்சள் துண்டு அணியத் தொடங்கியதற்குப் பின்னால் ஜோசியமோ அல்லது மூடநம்பிக்கையோ காரணம் அல்ல; அதக்குப் பின்னால் ஒரு மருத்துவக் காரணமும், சமூக நீதிக்கான வரலாற்று நிகழ்வுமே அமைந்திருந்தன. 1994 ஆம் ஆண்டு கலைஞர் அவர்களின் உமிழ்நீர்ச் சுரப்பியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கன்னத்தில் சிறிய வீக்கம் ஏற்பட்டது. அந்தப் பகுதியை எப்போதும் கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் தன் கழுத்தைச் சுற்றி சால்வை அணியத் தொடங்கினார்.

அதே காலகட்டத்தில், 1989-இல் திமுக ஆட்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவை உருவாக்கி, அதில் வன்னியர் சமூகத்தினரையும் சேர்த்து 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்காக வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கலைஞருக்கு அன்போடு ஒரு மஞ்சள் துண்டை அணிவித்தார். அந்த துண்டு அவருக்கு மிகவும் பிடித்துப்போகவே, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அதைத் தொடர்ந்து அணிய ஆரம்பித்தார். தன் மீது எத்தனையோ அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், இறுதிவரை அவர் அந்த மஞ்சள் துண்டை அணிவதைக் கைவிடவே இல்லை.

Nanthini

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

5 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

5 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

5 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

5 மணத்தியாலங்கள் ago