80s காலகட்டத்தில் பிரபலமான நடிகர் குரியகோஸ் காலமானார். இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்னதாகவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தவர். விசுவின் மணல் கயிறு படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்து இருப்பார். அவள் சுமங்கலி தான் படத்தில் குரியகோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் ரங்கா என்ற தனது பெயருடன் அதனை இணைத்துக் கொண்டார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
