குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் போனில் பேசியதை அறிந்த பெற்றோர், அவருக்கு கடும் துன்புறுத்தல் அளித்துள்ளனர். அச்சிறுமியின் தந்தை அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இக்கொடூர சம்பவத்திற்கு அச்சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி ஆண் நண்பருடன் பேசுவதை விரும்பாத பெற்றோர், அவரை மிரட்டி ஆடையின்றி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். அதனை வைத்து சிறுமியை தொடர்ந்து மிரட்டி வந்த தந்தை, பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த கொடுமைகளை சிறுமியின் தாயாரும் தடுத்து நிறுத்தாமல், தந்தைக்கு ஆதரவாக செயல்பட்டு சிறுமியை அச்சுறுத்தி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்த கொடுமைகளை தாங்க முடியாத சிறுமி, இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறுமியின் புகாரின் பேரில் விரைந்து நடவடிக்கை எடுத்த கட்ச் மாவட்ட காவல்துறையினர், போக்ஸோ சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை மற்றும் தாயாரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
