டெல்லி- என்.சி.ஆர் பகுதியில் உள்ள குருகிராம் ‘ஆம்பியன்ஸ் மால்’ வளாகத்தில், ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநருக்கும் பெண் பயணி ஒருவருக்கும் இடையே ரூ.186 கட்டணம் தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பயணத்தை முடித்த பிறகு, வங்கி சர்வர் கோளாறு காரணமாகத் பணத்தை உடனடியாகச் செலுத்த முடியவில்லை என்று அந்தப் பெண் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், “எனக்குச் சேர வேண்டிய கட்டணத்தைக் கொடுங்கள்” என்று கூச்சலிட்டு, தனது மொபைல் போனில் அந்தப் பெண்ணைப் படம்பிடித்துள்ளார். பதிலுக்கு அந்தப் பெண்ணும் “வீடியோ எடுங்கள்” என்று அவரிடம் காரசாரமாக வாதிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆன்லைன் பணப்பரிவர்த்தனை சிக்கல்கள், கிக் தொழிலாளர்களின் உழைப்பிற்கான கட்டணம் மற்றும் பயணிகளின் பொறுப்புகள் குறித்து நெட்டிசன்கள் பலவாறாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
